Hot Posts

6/recent/ticker-posts

நாள்:29.7.2024இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04286 – 299137 கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம். நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

நாள்:29.7.2024
இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் 1077 கட்டணமில்லா 
தொலைபேசி எண் மற்றும் 04286 – 299137 கட்டுப்பாட்டு அறை 
எண்களை தொடர்பு கொள்ளலாம். நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் 
மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
 
 நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், அணிச்சம்பாளையம் காவிரி கரையோர பகுதிகளில் இன்று (29.7.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,

நேற்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 10 மாவட்ட ஆட்சியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய காவிரி கரையோர பகுதியில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாக்க சமுதாய கூடம், திருமண மண்டபம் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தேவையான அடிப்படை வசதிகளுடன் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இன்றைய தினம் மேட்டூர் அணையிலிருந்து சுமார் 16,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள துணை ஆட்சியர் நிலையில் அனைத்து துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அனைத்து பகுதிகளும் தொடர் கண்காணிப்பில் உள்ளது. உள்ளாட்சி, நகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை. காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலைகள் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04286 – 299137 கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளித்தல், நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல், புகைப்படங்கள், சுயபடங்கள் எடுத்தல், காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்த்தல் போன்ற செயல்களை முற்றிலும் தவிர்த்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்