நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்
கர்நாடகா மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலசரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த திரு.சரவணன் அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து
ரூ.3.00 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
********
கர்நாடகா மாநிலம், வடகன்னட மாவட்டம், அங்கோலா வட்டம், சிரூரு பகுதியில் கடந்த 16.07.2024 அன்று LPG டேங்கர் லாரியில் ஓட்டுநராக சென்ற போது கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததை அடுத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உயிரிழந்தவரின் குடும்பதாருக்கு 25.7.2024 அன்று தனது இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்தார். கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் உயிரிழந்த திரு.சரவணன் அவர்களின் உடலை மீட்டு குடும்பதாரிடம் ஒப்படைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் உயிரிழந்த நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பாப்பிநாய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.சரவணன் அவர்களின் குடும்பத்தினருக்கு இன்றைய தினம் (30.7.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3.00 இலட்சத்திற்கான காசோலையை வழங்கி, குடும்பதாருக்கு ஆறுதலை தெரிவித்தார்.
முன்னதாக, 27.7.2024 அன்று மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.மாதேஸ்வரன் அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் உயிரிழந்த நாமக்கல் வட்டம், புதுச்சத்திரம் குறுவட்டம், தாத்தையங்கார்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.சின்னன்னன் அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3.00 இலட்சத்திற்கான காசோலையை வழங்கி, குடும்பதாருக்கு ஆறுதலை தெரிவித்தார்கள்.
0 கருத்துகள்