நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவி எஸ்.எஸ்.ரிதன்யா அவர்களுக்கு
ரூ.9,050/- மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் உடனடியாக வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (30.7.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்
நாமக்கல் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவி எஸ்.எஸ்.ரிதன்யா அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.9,050/- மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம், சரளை மேடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி எஸ்.எஸ்.ரிதன்யா அவர்கள் நாமக்கல் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும், விடுதிக்கும் பள்ளிக்கும் இடையே சுமார் 500 மீட்டர் தொலைவை மாற்றுத்திறனாளி மாணவியால் தினமும் பயணிப்பது சிரமமாக இருந்த நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களால் 29.07.2024 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மாணவிக்கு மூன்று சக்கரவண்டி வழங்க வேண்டி மனு அளித்துள்ளார்கள். இம்மனுவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசீலினை செய்து உடனடியாக அரசு விதிமுறைகளுக்குட்பட்டு மூன்று சக்கர சைக்கிள் வழங்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளி மாணவி எஸ்.எஸ்.ரிதன்யா அவர்களுக்கு ரூ.9,050/- மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
0 கருத்துகள்