Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்டஆட்சித்தலைவர் மருத்துவர்ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் நாமக்கல் நகராட்சி மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.

நாள்:29.7.2024
நாமக்கல் மாவட்டஆட்சித்தலைவர் மருத்துவர்ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 
நாமக்கல் நகராட்சி மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை 
திறந்து வைத்தார். 

நாமக்கல் நகராட்சி, மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (29.7.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் புதிய நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.
மாவட்டஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைகிணங்க நாமக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்றைய தினம் புதிய நகர ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுநோய் சிகிச்சை, பொதுமக்களுக்கு இலவசமாக நீரழிவு மற்றும் இரத்த கொதிப்பிற்கான தொடர் நோய் சிகிச்சை, ஆய்வக பரிசோதனை, இருதய நோய்களுக்கான ஈ.சி.ஜி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்க ஒரு மருத்துவர் மற்றும் செவிலியருடன் தற்காலிகமாக சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
 
 மேலும், அரசிடமிருந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு ஆணைகள் பெறப்பட்ட உடனே பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் புதிய நகர ஆரம்ப சுகாதார நிலையம் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். உயர்சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உயர்சிகிச்சை அளிக்கப்படும். எனவே, இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தினை பொதுமக்கள் சிறுநோய்களுக்கான சிகிச்சைகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதிய நகர ஆரம்ப சுகாதார நிலையம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். 

ஒரு மாவட்டத்தின் உச்சபட்ச மருத்துவ கட்டமைப்பு என்பது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகும். நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரையில் சிலுவம்பட்டியில் 700 படுக்கை வசதி, அறுவை சிகிச்சை, சிறப்பு சிகிச்சைகள் உள்ளிட்ட பலவேறு வசதிகளுடன் நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் மருத்துவ சேவை தொடங்கி வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அடுத்தபடியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என்பது தலைமையிடத்திலிருந்து 40-50 கி.மீ தொலைவில் அடுத்த தலைமை மருத்துவமனையை முன்னெடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்செங்கோடு மற்றும் இராசிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாவட்டத்தில் தலைமை இடத்தில் சிறப்பு மருத்துவ வசதிகளுடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையும், அடுத்தபடியாக 40-50 கி.மீ தொலைவில் ஒரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும் செயல்படும். நாமக்கல் மாவட்ட பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருச்செங்கோடு மற்றும் இராசிபுரத்தில் 2 அரசு தலைமை மருத்துவமனை அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்து கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அதற்கு அடுத்தபடியாக தாலுகா மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மருத்துவ கட்டமைப்புகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது இதனை பொதுமக்கள் சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் திரு.து.கலாநிதி, துணைத்தலைவர் திரு.செ.பூபதி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.கே.சாந்தா அருள்மொழி, இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.அ.ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் மரு.க.பூங்கொடி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்