Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரினை விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது குறித்து பாசன சங்க விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரினை விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது குறித்து பாசன சங்க விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 29.7.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரினை விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது குறித்து பாசன சங்க விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,
 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 28.07.2024 அன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், மேட்டூர் அணையில் வெள்ள உபரி நீரானது தற்போது பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கும், ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவதற்கும், ஏரிகள் மற்றும் குளங்களில் சேமிப்பதற்கும் ஏற்றவாறு திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தவும், ஏரிகள் மற்றும் குளங்களில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள். 
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5 நீர் பாசன அமைப்புகளில் மேட்டூர் கிழக்குக்கரை கால்வாய் மூலமாக, 4286.80.9 ஹெக்டேர் ஆயக்கட்டு பரப்புகளில் 1264 ஹெக்டேர் பரப்பில் நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இராஜா, குமாரபாளையம், மோகனுர் மற்றும் பொய்யேரி கால்வாய் மூலமாக, 6538.04 ஹெக்டேர் ஆயக்கட்டு பரப்புகளில் 2647 ஹெக்டேர் பரப்பில் நெல், சிறுதானியங்கள், கரும்பு, கோரை, தென்னை, வாழை, வெற்றிலை, மரவள்ளி மற்றும் மஞ்சள் பயிர் செய்யப்பட்டுள்ளது, 
தற்போது திறந்துவிடப்படும் உபரி நீரினால் ஆயக்கட்டு பகுதிகளில் பயிர் செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்பா பருவத்திற்கு என்று திறக்கப்பட உள்ள நீரினை பயன்படுத்தியே சம்பா பயிர்களை சாகுபடி செய்திட வேண்டும். திறந்து விடப்படும் உபரி நீரினை நிலத்தடி நீரை செரிவூட்ட பயன்படுத்தி கொள்ள வேண்டும். நீரினை பயன்படுத்துவது குறித்தும், நீர் ஆதாரத்தினை செரிவூட்டுவது குறித்தும் விவசாய சங்க பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். கரையோரங்களில் கால்நடைகள் மேய்க்கப்பட்டு வருவதால் தண்ணீரில் அடித்து செல்லாத வகையில் பாதுகாக்கும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாய்க்கால்களில் உள்ள அனைத்து மதகுகளையும் நல்ல முறையில் செயல்படுவது உறுதி செய்திட வேண்டும். ஆடி பெருக்கு விழாவில் மக்கள் கூடும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை பதாகைகளையும் அமைத்திட வேண்டும். ஆடி பெருக்கு விழாவில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தற்பொழுது திறந்துவிடப்படும் உபரி நீரை நல்லவிதமாக சேமிக்கவும், ஆடி பெருக்கு விழா சிறப்பாக நடைபெறவும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ச.பாலாகிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி ப.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.இராமசந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (பொ) திருமதி இ.கார்த்திகா, நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் திரு.விஜயகுமார், மேட்டூர் கிழக்குக்கரை, ராஜா வாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், மோகனூர் வாய்க்கால், பொய்யேறி வாய்க்கால் பாசன சங்க விவசாய பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்