Hot Posts

6/recent/ticker-posts

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.55 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.55 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.

 நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், சிலுவம்பட்டி ஊராட்சி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் இன்று (29.8.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.55 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் மற்றும் மாண்புமிகு மேயர் திரு.து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

 பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டிற்காக ஆண்டிற்கு ரூ.5.00 கோடி வழங்கப்படும் நிதியிலிருந்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் நியாய விலைக்கடை, அங்கன்வாடி மையம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் பரிந்துரை செய்து செயல்படுத்தி வருகின்றார்கள்.  

அதனடிப்படையில் சிலுவம்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 
ரூ.13.55 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடத்தை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் திறந்து வைத்தார். 

 இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திரு.செ.பூபதி, அட்மா குழுத்தலைவர் திரு.பழனிவேல், நாமக்கல் மாமன்ற உறுப்பினர் திரு.சிவக்குமார், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.சு.வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.கே.சாந்தா அருள்மொழி, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்