கைத்தறி துறை இயக்குநர் திரு.அ.சண்முக சுந்தரம், இ.ஆ.ப., அவர்கள்
அரசு நூல் கிடங்கில் ஆய்வு .
நாமக்கல் மாவட்டம், வெப்படை, பாதரை கைத்தறி துறை அரசு நூல் கிடங்கில்
இன்று (16.8.2024) கைத்தறி துறை இயக்குநர் திரு.அ.சண்முக சுந்தரம், இ.ஆ.ப., அவர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
வெப்படை அரசு நூல் கிடங்கில் பராமரிக்கப்பட்டு இருப்பு பதிவேடு, நூல் வரப்பெற்ற பதிவேடு, ஆய்வக பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அரசு நூல் கிடங்கில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பள்ளி சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு கிடங்கிற்கு பெறப்படும் நூல் மற்றும் சங்கங்களுக்கு நூல் விநியோகிக்கப்படும் விபரங்களை விரிவாக கேட்டறிந்தார். மேலும், கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 -ன் கீழ் உள்ள கைத்தறி ரகங்கள் ஒதுக்கீடு தொடர்பான விபரங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கைத்தறி துறை இயக்குநர் திரு.அ.சண்முக சுந்தரம், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து திருச்செங்கோடு வட்டம், அனிமூர் ஆதிசிவன் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், நெசவாளர் காலனி அர்த்தநாரீஸ்வரர் சைசிங் மில் ஆகிய இடங்களில் கைத்தறித்துறை இயக்குநர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, சங்கத்தின் செயல்பாடுகள், சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, சங்கத்தில் உள்ள தறிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.க.பா.அருளரசு, கைத்தறி துறை உதவி இயக்குநர்கள் திரு.அ.பழனிகுமார், திரு.கா.ரா.ஜெயவேல்கணேசன், கைத்தறி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 கருத்துகள்