Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 16,800 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தகவல்.

நாள்: 28.8.2024                  
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 16,800 பயனாளிகளுக்கு 
இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் 
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு 
அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தகவல்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், தேவனாங்குறிச்சி கிராமத்தில் இன்று (28.08.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 703 பயனாளிகளுக்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை தேடி அரசு சென்று அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்று உரிய தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் மக்களுடன் முதல்வர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த முகாம்கள் அப்பகுதி மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கவும், அரசின் அனைத்து திட்டங்கள் குறித்தும் அனைத்து துறைகளின் மூலமாக கண்காட்சி அமைத்து பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து விளக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு வட்டம், தேவனாங்குறிச்சி கிராமத்தில் இன்றைய தினம் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெறுகிறது. மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு மனிதனின் அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் என்பதை பூர்த்தி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். ஏழை, எளிய மக்கள் வீடு கட்டுவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி ரூ.3.50 இலட்சம் வழங்கி உள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ் மாநிலத்திலேயே அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6,500 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள சுமார் 560 பயனாளிகளுக்கு அடுத்த ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகட்ட ஆணை வழங்கப்படும். நம் மாவட்டத்தில் மட்டும் 2021 முதல் 3 ஆண்டுகளில் சுமார் 16,800 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீடு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.1.50 இலட்சம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.5.00 இலட்சம் வரை உயர் மருத்துவ சிகிச்சைகள் பெற முடியும். மேலும், கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவுத்திட்டம், அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 18,651 மாணவியர்களும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் சுமார் 12,796 மாணவர்களும் மாதம் ரூ.1,000/- பெற்று பயன்பெற்று வருகின்றார்கள். 

மேலும், மக்கள் அரசிடம் எதிர்பார்க்கும் எந்த ஒரு கோரிக்கையையும் விடுபடாமல் கனிவுடன் ஏற்று பரிசீலித்து உரிய முறையில் தீர்வு காண வேண்டுமென உத்தரவிட்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதற்கட்டமாக நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் முகாம்கள் நடத்த உத்தரவிட்டார்கள். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 95 சதவிகித கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்ட சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தரவிடப்பட்டு, நேற்றுடன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 322 ஊராட்சிகளுக்கு 69 இடங்களில் "மக்களுடன் முதல்வர்" திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகுதியான மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. 

தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நலனுக்காக தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகின்றது. விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி கொண்டு தங்களது விவசாயத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். அரசின் அனைத்து திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனைத்து அரசு துறை அலுவலர்களும் முனைப்புடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள். அரசின் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வாதரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக வருவாய்த்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ச்சி துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். மேலும், துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசுத்திட்டங்கள் குறித்து திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள்.

தொடர்ந்து, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,000 மதிப்பில் ஊட்டசத்து பெட்டகங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,050/- மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 7 நபர்களுக்கு ரூ.3.36 இலட்சம் மதிப்பில் நிதி உதவி, வேளாண்மை துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.1.62 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் 1 விவசாயிக்கு பழைய மின் மோட்டார் மாற்றும் திட்டத்தின் கீழ் ரூ.15,000/- மதிப்பில் நிதிஉதவி, கூட்டுறவு துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.88.97 இலட்சம் மதிப்பில் கடனுதவிகள், தொழிலாளர் நல வாரியம் சார்பில் 4 நபர்களுக்கு நல வாரிய அட்டை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.12,000/- மதிப்பில் இலவச தையல் இயந்திரம், முன்னோடி வங்கி சார்பில் 1 பயனாளிக்கு ரூ.9.40 இலட்சம் மதிப்பில் கடனுதவி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.5.47 இலட்சம் மதிப்பில் தொழில் கடனுதவி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 63 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை, வருவாய்த்துறை சார்பில் 391 பயனாளிகளுக்கு ரூ.3.91 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், 169 பயனாளிகளுக்கு 
இ-பட்டாக்கள் என மொத்தம் 703 பயனாளிகளுக்கு ரூ.5.00 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.என்.அருண்குமார், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் திரு.க.பா.அருளரசு, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி சே.சுகந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், மாவட்ட நல அலுவலர் மரு.க.பூங்கொடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் திரு.த.முத்துராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி தி.காயத்திரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சதீஷ்குமார், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி ப.கவிதா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் திரு.நாராயணன், உதவி இயக்குநர் (நில அளவை) திரு.இரா.ஜெயசந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இளநிலை மறுவாழ்வு அலுவலர் திரு.ரா.பிரகாஷ், வட்டாட்சியர் திரு.விஜயகாந்த் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்