மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.8.2024) காணொலி காட்சி வாயிலாக நாமக்கல் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 5 மரகதப் பூஞ்சோலைகளை திறந்து வைத்ததை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டி மரகதப் பூஞ்சோலையை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய
கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பார்வையிட்டார். உடன நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் திரு.சி.கலாநிதி.இ.வ.ப., நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.மாதேஸ்வரன்,
நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் உட்பட பலர் உள்ளனர்.
0 கருத்துகள்