சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில்
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு
வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் கலந்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கண்ணூர்பட்டி ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி கே.வளர்மதி அவர்கள் தலைமையில் இன்று (15.08.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு
வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணத்தை திட்டம், 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை உயர்வு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000/- வழங்கும் திட்டம், அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்கள் மருத்துவம், பொறியியல், சட்டம், கலை, அறிவியல், தொழில் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், காலை உணவுத்திட்டம், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.1,500/- ஊதிய உயர்வு வழங்கி ரூ.5,000/- வழங்கும் திட்டம், ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்ட ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பிட வேண்டும்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6,040 பயனாளிகளுக்கு ரூ.211.40 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 33 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, தொடர்ந்து கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இப்பகுதி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட வேண்டுமென்று இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பட்டணம், புதுச்சத்திரம், சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு பூலாம்பட்டியிலிருந்து குடிநீர் கொண்டு வர சுமார் ரூ.850.00 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல், பைப் லைன் அமைத்தல், உள்ளிட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்பட உள்ளது. மேலும், புதிய தார் சாலை பணிகள், பொது விநியோக கடைகளில் தரமான உணவு பொருட்கள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். எனவே, அரசின் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்கள்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் கிராம புறங்களுக்கு சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கிராம புறங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கலைஞரின் கனவு இல்லம், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவுத் திட்டம், அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். மேலும், கூட்டுறவு துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனைத்து அரசு துறையினரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் அரசிடம் எதிர்பார்க்கும் எந்த ஒரு கோரிக்கையையும் விடுபடாமல் பரிசீலித்து உரிய முறையில் தீர்வு காண வேண்டுமென உத்தரவிட்டு, “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை ஊரக பகுதிகளில் விரிவுபடுத்தி உள்ளார்கள். ஊரகப்பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் “மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகளவில் அணுகும் அரசுத் துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, எரிசக்தித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடுத் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த 44 வகையான கோரிக்கைகள், 30 தினங்களுக்குள் தீர்வு காணும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
நாம் அனைவரும் பெண் குழந்தைகளை பாதுகாத்திட உறுதி ஏற்க வேண்டும். பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி, பள்ளிக்கு அனுப்ப வேண்டும். கல்வி ஒன்றே நம்மிடமிருந்து யாராலும் பறிக்க முடியாத செல்வம் ஆகும். கல்வி ஒன்றே ஒருவரது வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தும், பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களை அறிந்து முழுமையாக பயன்படுத்தி சிறப்பாக வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்
மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி வரி செலுத்தும் சேவை, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் (SELF CERTIFICATION), தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு (TNPASS), தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை வாரியம் – உயிரிப் பல்வகைமை மேலாண்மை குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், இதர பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாட்டு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தோட்டக்கலைத்துறை சார்பில் தென்னை பரப்பு விரிவாக்கம் திட்டத்தின் கீழ் ரூ.4,800/- மதிப்பில் நலத்திட்டம், 3 விவசாயிகளுக்கு 50 எண்ணிக்கையில் தென்னைக் கன்றுகள், வேளாண்மை துறை சார்பில், 50 சதவிகித மானியத்தில் ரூ.2,500/- மதிப்பில் துவரை விதைகள் மற்றும் தலா ரூ.6,000/- மதிப்பில் மக்காசோள விதைகள் என மொத்தம் 4 விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, சுதந்திர தின விழாவினை முன்னிட்டு அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் திரு.க.பா.அருளரசு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சதீஷ்குமார் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி ப.கவிதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (பொ) திருமதி இ.கார்த்திகா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இளநிலை மறுவாழ்வு அலுவலர் திரு.ரா.பிரகாஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்