Hot Posts

6/recent/ticker-posts

இராசிபுரம் பகுதியில் இருளர் மலைவாழ் மக்களின் சுதந்திரதின கொண்டாட்டம்

இராசிபுரம் பகுதியில் இருளர் மலைவாழ் மக்களின் சுதந்திரதின கொண்டாட்டம்

இராசிபுரம்;ஆக,16-

இராசிபுரம் பகுதியில் இருளர் மலைவாழ் மக்களின் சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக அரசு மற்றும்மத்திய அரசு , மற்றும் மேக்னம் தொண்டு நிறுவனம்இணைந்து அழிந்துவரும் சூழலில் உள்ள மழைவாழ்மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்த வந்தன் விகாஸ் கேந்ரா என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்த அமைப்பானது
நாமக்கல் மாவட்டத்தில் மேக்னம் நிறுவனத்தின் வழிகாட்டுதல்அடிப்படையில் செயல்பட்டுவருகிறது.
இது முழுமையாக அழிந்துவரும் சூழலில் உள்ள இருளர் மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல்பட்டி கிராமத்தில் 
இருளர் மக்கள் சார்பாக 78வது சுதந்திரதின நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேக்னம் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் எஸ்.சத்தியதாஸ் கலந்துகொண்டார். மேலும் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகளை வழஙகினர்.இதனை தொடர்ந்து 
பெண்கள்,குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட இருளர் மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்