பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக்
கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள்
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் இரண்டாவது சிறப்பு பொதுப்பேரவைக் கூட்ட அழைப்பிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (04.09.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் இரண்டாவது சிறப்பு பொதுப்பேரவைக் கூட்ட அழைப்பிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நாமக்கல் மாவட்டத்திற்கென புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட ஆணையிடப்பட்டு அரசாணை வெளியிட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதல் பொது பேரவைக் கூட்டம் 25.6.2024 அன்று நடத்தப்பட்டது. இப்பேரவை பொதுக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியினைப் பிரித்து சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வழங்கப்பட்ட அரசாணையினை வாசித்து பதிவு செய்தல் மற்றும் அரசாணையினை வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத்திட்டங்கள் மற்றும் ஊரகக்கடன்கள் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, 12 பொருள்கள் அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் 05.09.2024 அன்று நடைபெற உள்ள இரண்டாவது சிறப்பு பொதுப்பேரவைக் கூட்டத்திற்கு அழைப்பிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.
இரண்டாவது சிறப்பு பொதுப்பேரவைக் கூட்டத்தில் சேலம் / நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு கூட்டாக பாத்தியப்பட்ட அசையா சொத்துக்கள் மற்றும் முதலீடு செய்யப்பட்ட நீர்ம ஆதாரங்கள் ஆகியவற்றை உறுப்பினர் சங்கங்களின் கணக்குகள் அடிப்படையில் பிரிவினை மேற்கொண்டு வழங்கப்படும் தொகைகள் குறித்த தீர்மானங்களை அங்கீகரித்து ஏற்பளித்தல், இடைக்கால நிர்வாகக் குழு நியமனத்தை 6 மாத காலத்திற்கு நீடித்தல், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி நாமக்கல் கிளை மற்றும் தலைமையக அலுவலக கட்டடம் கட்ட ஏதுவாக நில உரிமை மாற்றம் செய்து தரக்கோரி முன்மொழிவு சமர்ப்பித்தல் குறித்து பரிசீலித்து அங்கீகரித்து தீர்மானித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிகழ்வின் போது கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் திரு.க.பா.அருளரசு உடனிருந்தனர்
0 கருத்துகள்