பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு
வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மக்கள் தொடர்பு முகாமில் 393 பயனாளிகளுக்கு ரூ.2.94 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், ஓ.சௌதாபுரம் செங்குந்தர் சமுதாய கூடத்தில் இன்று (11.09.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 393 பயனாளிகளுக்கு ரூ.2.94 கோடி மதிப்பில் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை தேடி அரசு சென்று அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்று உரிய தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் மக்களுடன் முதல்வர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த முகாம்கள் அப்பகுதி மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கவும், அரசின் அனைத்து திட்டங்கள் குறித்தும் அனைத்து துறைகளின் மூலமாக கண்காட்சி அமைத்து பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து விளக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில், இராசிபுரம் வட்டம், ஓ.சௌதாபுரம் செங்குந்தர் சமுதாய கூடத்தில் இன்றைய தினம் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெறுகிறது. மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் மகளிருக்கான 5 முத்தான திட்டங்களான பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து விடியல் பயணம், மாதம் ரூ.1,000/- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை, 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி மற்றும் ஏழை, எளிய மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், ஏழை, எளிய மக்கள் வீடு கட்டுவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி ரூ.3.50 இலட்சம் வழங்கி உள்ளார்கள். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் சுமார் 340 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. இராசிபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் ரூ.854 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்கள். இதன் மூலம் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இன்றைய தினம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் பயனாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு காதுக்கு பின்புறம் அணியும் காதொலி கருவிகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிக்கு மின் மோட்டார் பம்பு செட்டு, முன்னோடி வங்கி சார்பில் கடனுதவி, வருவாய்த்துறை சார்பில் 113 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாக்கள்,
183 பயனாளிகளுக்கு ரூ.1.46 கோடி மதிப்பில் இ- பட்டாக்கள், 14 பயனாளிகளுக்கு ரூ.14.00 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், கூட்டுறவு துறை சார்பில் பயிர் கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக வருவாய்த்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ச்சி துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பார்வையிட்டார். மேலும், துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசுத்திட்டங்கள் குறித்து திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள்.
தொடர்ந்து, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,000 மதிப்பில் ஊட்டசத்து பெட்டகங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,340/- மதிப்பில் காதுக்கு பின்புறம் அணியும் காதொலி கருவிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 5 நபர்களுக்கு ரூ.2.40 இலட்சம் மதிப்பில் நிதி உதவி, வேளாண்மை துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.8,700 மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் 1 விவசாயிக்கு மின் மோட்டார் பம்பு செட்டு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.24,238/- மதிப்பில் நலத்திட்ட உதவி, தோட்டக்கலை துறை சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.80,450/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், கூட்டுறவு துறை சார்பில் 23 பயனாளிகளுக்கு
ரூ.31.35 இலட்சம் மதிப்பில் பயிர் கடனுதவி, ரூ.2.70 இலட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன் உதவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.18,000/- மதிப்பில் இலவச தையல் இயந்திரம்,
முன்னோடி வங்கி சார்பில் 3 பயனாளிக்கு ரூ.19.00 இலட்சம் மதிப்பில் கடனுதவி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை, வருவாய்த்துறை சார்பில் 113 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாக்கள்,
183 பயனாளிகளுக்கு ரூ.1.46 கோடி மதிப்பில் இ- பட்டாக்கள், 14 பயனாளிகளுக்கு ரூ.14.00 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், 4 நபர்களுக்கு ரூ.11,000/- மதிப்பில் கல்வி உதவித்தொகை, 4 நபர்களுக்கு ரூ.85,000/- மதிப்பில் தற்காலிக உதவித்தொகை, 9 நபர்களுக்கு ரூ.2.03 இலட்சம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு ரூ.28,000/- மதிப்பில் திருமண உதவித்தொகை, தாட்கோ சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.44.73 இலட்சம் மதிப்பில் வீடுகட்ட ஆணைகள், ரூ.29.15 இலட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி என மொத்தம் 393 பயனாளிகளுக்கு ரூ.2.94 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.ஏ.ஆர்.துரைசாமி, அட்மா குழுத்தலைவர் திரு.ஆர்.எம்.துரைசாமி, வெண்ணந்தூர் பேரூராட்சி தலைவர் திரு.ராஜேஸ், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி என்.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் திரு.க.பா.அருளரசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஆர்.பார்தீபன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.த.முத்துராமலிங்கம், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி பொ. பேபிகலா, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் மரு.ஈ.மாரியப்பன், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் திரு.முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சதீஷ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி தி.காயத்திரி, வட்டாட்சியர் திரு.சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்