நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை
கொடியசைத்து தொடங்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டார்.
நாமக்கல் மாநகராட்சி, மோகனூர் சாலை, புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (13.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டார்.
இப்பேரணியானது புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி மோகனூர் சாலையாக பி.எஸ்.என்.எல் அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், திருச்சி சாலை, மோகனூர் சாலை வழியாக மீண்டும் புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முடிவடைந்தது. இப்பேரணியில் 500-க்கும் மேற்பட்ட துணை செவிலியர்கள் பயிற்சி பள்ளி மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள், அரசினர் பாலிடெக்னிக் பயிற்சி பள்ளி மாணவியர்கள், ஸ்ரீ கோகுல் மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை கல்லூரி மாணவியர்கள், அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தற்கொலைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியாகச் சென்றனர். இப்பேரணியில் அனைவரும் ஒன்றிணைந்து நாமக்கல் மாவட்டத்தை தற்கொலை இல்லாத மாவட்டமாக உருவாக்க உறுதி ஏற்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
தொடர்ந்து, உலக தற்கொலை தடுப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், பள்ளி, கல்லூரி மாணவியர்கள் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர். மேலும், உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி ஸ்டேண்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முன்னதாக, உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.அ.ராஜ்மோகன், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள், துணை செவிலியர்கள் பயிற்சி பள்ளி மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள், அரசினர் பாலிடெக்னிக் பயிற்சி பள்ளி மாணவியர்கள், ஸ்ரீ கோகுல் மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை கல்லூரி மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
0 கருத்துகள்