நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்
பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு செல்ஃபி ஸ்டேண்டில் பெண் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (30.9.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு செல்ஃபி ஸ்டேண்டில் பெண் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ”பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தை தனி கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள்.
"பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தின் முக்கிய நோக்கமானது, பெண் குழந்தைகளின் பிறப்பினை உறுதி செய்து, அவர்களின் கல்வி, திறன் மற்றும் பங்கேற்பினை மேம்படுத்துதல் ஆகும்.” இத்திட்டமானது ஆண், பெண் குழந்தை விகிதத்தை சமன்படுத்துவதற்காகவும், குறைந்து வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளின் பாலின சமநிலையை மேம்படுத்திடவும், பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்திடவும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், பாலின பாகுபாட்டை நீக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறப்பினை போற்றி பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு மற்றும் மரக்கன்றுகள் நடுதல், விளம்பர வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பெண் தொழில் முனைவோருக்கான நிதி, கல்வியறிவு மற்றும் திறன் வளர்ப்புப் பயிற்சி, பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், பெண் குழந்தைகள் உயர் கல்விக்கு செல்வதை உறுதிபடுத்துதல், சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி உள்ளிட்டவற்றை மேம்படுத்துதல், பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பில் சிறப்பாக செயலாற்றும் நபர்கள் மற்றும் சிறந்த ஊராட்சிகளுக்கு விருது வழங்குதல், பாராம்பரிய உணவு கண்காட்சி அமைத்தல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதனடிப்படையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ”பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ், 19.9.2024 அன்று திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கல்லூரில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், 26.9.2024 அன்று பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி தி.காயத்திரி, பெண் குழந்தைகள் மற்றும் அவர்களது தாய்மார்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்