Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்டத்தில் நகர்புற கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.4.00 இலட்சம் மானியத்துடன் கூடிய வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 29 நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு ரூ.1.16 கோடி நிதி ஒதுக்கீடு.மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

நாமக்கல் மாவட்டத்தில் நகர்புற கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.4.00 இலட்சம் மானியத்துடன் கூடிய வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 29 நெசவாளர்களுக்கு 
வீடு கட்டுவதற்கு ரூ.1.16 கோடி நிதி ஒதுக்கீடு.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் பேரூராட்சியில் இன்று (11.09.2024) நகர்புற கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.4.00 இலட்சம் மானியத்துடன் கூடிய வீடுகள் கட்டும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நெசவாளர்களுக்கு வீடு கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை 4 இலட்சம் ரூபாய் ஆக உயர்த்தி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இத்திட்டம் நகர்புற நெசவாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார்கள். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு 2021-22 ஆம் ஆண்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது ”கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை ரூ.4.00 இலட்சமாக உயர்த்தி நகர்ப்புற நெசவாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்த 29 நகர்ப்புற கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.4.00 இலட்சம் வீதம் ரூ.1.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 7 கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.4.00 லட்சம் வீதம் மானியத்தில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் வெண்ணந்தூர் பேரூராட்சியில் பயனாளி திரு.நாகராஜ் மற்றும் திருமதி சந்திரா ஆகியோரது வீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பயனாளிகளின் வீட்டில் ஆய்வு மேற்கொண்டு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மானிய தொகை விபரம், மேற்கொண்டு வரும் நெசவுத்தொழில், நெசவு செய்யும் ரகங்கள், அதன் மூலம் கிடைக்க பெறும் வருமானம், அரசின் பிற நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர் (கைத்தறி) திரு.அ.பழனிகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்