இராசிபுரம்; அக்,3-
100 நாள் வேலைத் திட்டங்களை அரசு அறிவித்த படி 150 நாள் கிடைக்க நடவடிக்கை எடுக்க மங்களபுரம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து பகுதியில் கிராம சபை கூட்டம் தாண்டா கவுண்டம் பாளையத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மங்களபுரம் தாண்டாகவுண்டம் பாளையம் அம்பேத்கர் நகரில் மேல் நிலை நீர்தொட்டி அமைக்க வேண்டும்,
மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச் சுவரை விரைவில் கட்ட வேண்டும், மங்களபுரம் பஞ்சாயத்து பகுதியில் அங்கன்வாடி மையங்களில் விரைந்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டங்களை அரசு அறிவித்த படி 150 நாள் அனைவருக்கும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மங்களபுரம் பஞ்சாயத்து ஊராட்சி தலைவர் கெளசல்யா முருகப்பன், செயலாளர் நடராஜன், துணைவட்டார வளர்ச்சி அலுவலர் கிருபாகரன்,பிஜேபி பாஸ்கரன்,அழகரசன், கண்ணன், வார்டு உறுப்பினர் ரமேஷ், பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், சிவக்குமார், ஆசிரியர் தங்கராஜ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்