பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு
வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தகவல்.
நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி நியாய விலைக்கடையில் இன்று (26.10.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.மாதேஸ்வரன் அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் தீபாவளி திருநாள் 2024 முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 345 பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மகளிருக்கு பேருந்துகளில் இலவச விடியல் பயணம், 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, மகளிர் சுய தொழில் தொடங்கிட கடனுதவி, பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட மாதம் ரூ.1000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1,000/-வழங்கும் திட்டம், ஏழை, எளிய குழந்தைகளின் பசியினை போக்கிட பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு உதவித்தொகையை ரூ.1,000/- லிருந்து ரூ.1,200/- ஆக உயர்த்தி வழங்கி உள்ளார்கள்.
மேலும், வருவாய்த்துறை சார்பில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகள் பெறும் பயனாளிகளுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு இலவச சேலைகள் மற்றும் வேட்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் நியாய விலைக்கடைகள் மூலம் 75,630 சேலைகள், 29,620 வேட்டிகள் என மொத்தம் 1,05,250 வேட்டி, சேலைகளும், கிராம நிர்வாக அலுவலர் மூலம் 5,499 சேலைகள், 1,428 வேட்டிகள் என மொத்தம் 6,927 வேட்டி, சேலைகள் என மொத்தம் 81,129 சேலைகள், 31,048 வேட்டிகள் என மொத்தம் 1,12,177 வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது. இன்றைய தினம் செல்லப்பம்பட்டி நியாய விலைக்கடையில் 259 சேலைகள், 86 வேட்டிகள் என மொத்தம் 345 சேலைகள், வேட்டிகள் வழங்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.தியாகராஜன், அட்மா குழு துணை தலைவர் திரு.ஜெயபிரகாஷ், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் திரு.க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், வட்டாட்சியர் திரு.சி.சீனிவாசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
0 கருத்துகள்