Hot Posts

6/recent/ticker-posts

நாள்:25.10.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சர்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்

நாள்:25.10.2024
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 
சர்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று (25.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு.ச.கலாநிதி., இ.வ.ப., அவர்கள் முன்னிலையில், சர்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். 
காலநிலை மாற்றத்தை தணிக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் காலநிலை மாற்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 
  இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 24-ம் தேதி உலகளாவிய அளவில் சர்வதேச காலநிலை மாற்ற நடவடிக்கை நாள் (International Climate Action Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து வகையிலும், மக்களுக்கு காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. 
 இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.இ.எஸ்.முருகேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்