நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (23.10.2024) 668.51 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 111.23 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை நெல் 1675எக்டர், சிறுதானியங்கள் 43,078 எக்டர், பயறு வகைகள் 6,604 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 26,953 எக்டர், பருத்தி 1,285 எக்டர் மற்றும் கரும்பு 7,385 எக்டர் என மொத்தம் 86,980 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 423 எக்டர், கத்திரி 266 எக்டர், வெண்டை 208எக்டர், மிளகாய் 165 எக்டர், மரவள்ளி 1391 எக்டர், வெங்காயம் 1955எக்டர், மஞ்சள் 1882எக்டர் மற்றும் வாழை 2114எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிறப்பு பருத்தில் நெல் சம்பா பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.549.82 ஐ16.12.2024 தேதிக்குள்ளும் மற்றும் தோட்டக்கலை பயிரான சிறிய வெங்காயம்-II பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2050.10-ஐ 30.11.2024 தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். இரபி பருவத்தில் உளுந்து பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.228.23-ஐ 15.11.2024 தேதிக்குள்ளும், பாசிப்பயறு பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.191.44-ஐ 15.11.2024 தேதிக்குள்ளும், சோளம் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.112.24-ஐ 30.11.2024தேதிக்குள்ளும், மக்காச்சோளம் பயிருக்கு பிரிமீயத் தெகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.478.69-ஐ 30.11.2024 தேதிக்குள்ளும், நிலக்கடலை பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.315.67-ஐ 30.12.2024 தேதிக்குள்ளும், பருத்தி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.350.66-ஐ 17.03.2025 தேதிக்குள்ளும் மற்றும் கரும்பு பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1165.84-ஐ 31.03.2025 தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.
மேலும், தோட்டக்கலை பயிர்களான தக்காளி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1017.64-ஐ 31.01.2025 தேதிக்குள்ளும் மரவள்ளி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.619.48-ஐ 28.02.2025 தேதிக்குள்ளும், மற்றும் வாழைப்பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1857.44-ஐ 28.02.2025 தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பயிர்காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் மேற்கண்ட பயிர்களுக்கு உரிய பரிமியத் தொகையை கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, வங்கிக் கணக்குப்புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் IFSC Code எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரிமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம். இதுநாள் வரை 13.29 எக்டர் பரப்பு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்களிடம் விவசாயிகள் வழங்கினார்கள்.
தொடர்ந்து, தற்பொழுது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் ரபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு துண்டு பிரசுரங்களை விவசாய பெருமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், புதுச்சத்திரம் வட்டரத்தில் திருமதி.கவிதா என்பவர் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் 1,345 கிலோ பாசிப்பயறு அறுவடை செய்து சாதனை புரிந்தமைக்கு மாநில அளவில் முதல் பரிசாக ரூ.15,000-க்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் திரு.ச.கலாநிதி., இ.வ.ப., மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திருமதி க.ரா.மல்லிகா, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் திரு.க.பா.அருளரசு, வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.ஆர்.பார்தீபன் (நாமக்கல்), திருமதி.சே.சுகந்தி (திருச்செங்கோடு), வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி.பொ. பேபிகலா, தோட்டக்கலைத் துணை இயக்குநர் திருமதி.மா.புவனேஷ்வரி, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) திரு.நாசர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) திரு.க.இராமச்சந்திரன் துறைசார்ந்த அலுவலர்கள், விவசாய பெருமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்