நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு நடைபெறும் மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளி மற்றும் டிரினிட்டி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில்
இன்று (26.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் (நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) போட்டித்தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தேர்வு மையங்களில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்வு எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் (நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) போட்டித்தேர்வு இன்று (26.10.2024) காலை 9.30 க்கு தொடங்கி 12.45 மணி வரை நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஓ.எம்.ஆர் (OMR) மூலம் மொத்தம் 2,304 நபர்களும், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை (Descriptive) முறையில் 6 தேர்வர்கள் என மொத்தம் 2,310 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதற்கென 8 தேர்வு மைங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்வினை கண்காணிக்க 8 முதன்மை கண்காணிப்பாளர்கள், 1 பறக்கும் படை, 2 நடமாடும் குழுக்கள், 8 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். மேலும், கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர்கள் தேர்வு எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் (நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) போட்டித்தேர்வினை 1,125 தேர்வர்கள் எழுதி உள்ளார்கள். 1,179 தேர்வர்கள் தேர்விற்கு வருகைபுரியவில்லை.
0 கருத்துகள்