நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்
பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், எம்.மேட்டுப்பட்டி, பரமத்தி வேலூர் வட்டம், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 09.10.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்
மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், எம்.மேட்டுப்பட்டி உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்த்துளை கிணறு மற்றும் ரூ.2.85 இலட்சம் மதிப்பீட்டில் கழிப்பிடம் ஆகிய பணிகள், தொடர்ந்து, பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ச.சேகர் அவர்கள் முன்னிலையில், பரமத்தி வேலூர் வட்டம், பிலிக்கல்பாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளதையொட்டி நாமக்கல் மாநகராட்சி, பரமத்தி சாலை, செலம்பகவுண்டர் பூங்காவில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
0 கருத்துகள்