Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நாள்:10.10.2024

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 
பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், சீனிவாசம்பாளையம், கருவேப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (10.10.2024) 
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 
பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

திருச்செங்கோடு வட்டம், சீனிவாசம்பாளையத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் வருகை தரும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளின் விபர பதிவேடு, வயதிற்கேற்ற எடை, உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவு விபரம், உணவுப்பொருட்களின் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, அங்கன்வாடி மையத்தை சுகாதாரமாகவும், மழை காலங்களில் சுற்றுப்புறத்தில் மழை நீர் தேங்காத வகையில் பராமரிக்குமாறும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவிட்டு, அங்கன்வாடி மையத்திற்கு வருகைதந்திருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

திருச்செங்கோடு வட்டம், கருவேப்பம்பட்டியில் சுகாதார வளாகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்