நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் திருச்செங்கோடு மற்றும் இராசிபுரம் நகராட்சிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மற்றும் இராசிபுரம் நகராட்சிகளில் இன்று (08.11.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செங்கோடு நகராட்சி, கூட்டப்பள்ளி வார்டு எண்-20 ல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.98.00 இலட்சம் மதிப்பில் ஓடையின் குறுக்கே 10 மீட்டர் நிளம், 7.50 மீ அகலத்தில் பாலம் அமைக்கும் பணியையும், கூட்டப்பள்ளி காலனியில், மகளிர் சுய உதவிக் குழுவினரால் நடத்தப்படும் ஹரி சூர்யா கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பைகள் தைக்கும் தொழில் மேற்கொண்டு வருவதை ஆய்வு மேற்கொண்டு, தயாரிக்கப்படும் பைகளின் விவரம், பணியில் ஈடுபட்டு வரும் மகளிர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். மேலும் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தொழிற்கூடம் அமைக்க தேவையான இட வசதிகளை ஏற்படுத்தி தர நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, கூட்டப்பள்ளி ஏரி அருகில் 5 ஏக்கர் பரப்பளவில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, இராசிபுரம் நகராட்சி, பழைய பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணி ஆரம்பிக்கப்பட்ட காலம், பணி முடிவடையும் காலம், நிறுத்தப்படவுள்ள வாகனங்களின் எண்ணிக்கை, அமைய உள்ள கடைகளின் எண்ணிக்கை, பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை நகராட்சி ஆணையாளரிடம் கேட்டறிந்தார். நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இராசிபுரம் நகராட்சி, வார்டு எண்- 3 கேசவன் லே-அவுட் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.34.00 இலட்சம் மதிப்பில் பசுமை பூங்கா அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது நகராட்சி ஆணையாளர்கள் திரு.என்.அருள் (திருச்செங்கோடு), திரு.கணேசன் (இராசிபுரம்), நகராட்சி பொறியாளர் திரு.பி.சரவணன் (திருச்செங்கோடு), உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்