திருச்செங்கோடு;நவ,9-
தமிழ்நாடு கிராம வங்கி - நபார்டின் நிதி உதவியுடன் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் ,மல்லசமுத்திரம் கிளை சார்பாக துத்துப்பாளையம் கிராமத்தில் 08.11.2024 அன்று நடைபெற்றது,
இதில்நிதிசார் கல்வி ஒருங்கிணைப்பாளர் விஜயபூபதி ,தமிழ்நாடு கிராம வங்கி ,நாமக்கல் மண்டலம் கலந்து கொண்டார். அவர் கடன் மதிப்பென் குறித்தும்,அரசின் இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்தும் விரிவான விளக்க அளித்தார்.மேலும் சிறப்பு அழைப்பாளராக மேக்னம் பி.சக்திவேல்,செயலாளர்,அவர்கள் கலந்து கொண்டு அரசு திட்டஙகளான பிரதான் மந்திரி சுரஸ்சா பீமா யோஜானா ,பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜானா போன்ற அரசு நலதிட்டஙகள் குறித்து விளக்கம் அளித்தார்.இறுதியாக விபத்தால் இறந்த ராஜா அவர்களது மனைவி கன்னம்மாள் ராஜா அவர்களுக்கு பிரதான் மந்திரி சுரக்ஸா பீம யோஜனா இன்சூரஸ் திட்டதின் கீழ் ரூ.2,00,000 க்கான விபத்து காப்பீட்டு தொகைஜெயசந்திரன்,கிளைமேலாளர்,தமிழ்நாடு கிராம வங்கி,மல்லசமுத்திரம் ,பி.சக்திவேல்,செயலாளர்,மேக்னம் மற்றும் திரு.விஜயபூபதி அவர்களால் வழங்கப்பட்டது,
இந்த நிகழ்வில் 12 நபர்கள் பிரதான் மந்திரி சுரஸ்சா பீம யோஜனா திட்டத்திலும் 7 நபர்கள் பிரதான் மந்திரி ஜீவ ஜோதி பீம யோஜானா திட்டத்திலும்,2 நபர்கள் அடல் பென்சன் யோஜானா திட்டத்திலும் இணைந்தனர்.
நிறைவாக திரு.ஜெயசந்திரன்,கிளைமேலாளர்,தமிழ்நாடு கிராம வங்கி,மல்லசமுத்திரம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் 70 நபர்கள் கலந்துகொண்டனர்
0 கருத்துகள்