மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு
ரூ.58.34 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (16.12.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 480 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், தாட்கோ மூலம் 15 நபர்களுக்கு மளிகை கடை, பயணியர் வாகனம், கறவை மாடு, ஆடு வளர்ப்பு தொழில்கள் மேற்கொள்ள அரசு மானியத்தில் ரூ.58.34 இலட்சம் மதிப்பில் தொழில் கடனுதவிகளையும், மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.730/- மதிப்பில் கிரட்சஸ், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.580/- மதிப்பில் ஊன்றுகோல் மற்றும் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.2,780/- மதிப்பில் காதொலிக்கருவி என மொத்தம் 18 நபர்களுக்கு ரூ.58.34 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி சே.சுகந்தி, தொழிலாளர் உதவி ஆணையர் திருமதி கே.பி.இந்தியா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்