Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளிக்கு தீவிர நோய் சிகிச்சை உதவித்தொகை வழங்கினார்.

நாள்:16.12.2024    

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளிக்கு 
தீவிர நோய் சிகிச்சை உதவித்தொகை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (16.12.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தொழிலாளர் நலத்துறையின், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளிக்கு தீவிர நோய் சிகிச்சை உதவித்தொகை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் 1,78,165 நபர்கள், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தில் 21,317 நபர்கள், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் 1,37,723 நபர்கள் என மொத்தம் 3,37,205 நபர்கள் பதிவு செய்துள்ளார்கள். 
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றம் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா, சிலிக்காசிஸ் மற்றும் பக்கவாதம் ஆகிய தீவர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீவிர நோய் பாதிப்பு நலத்திட்டத்தின் கீழ் உதவித்தொகையாக ரூ.12,000/- என மாதம் ஒன்றுக்கு ரூ.1,000/- வீதம் 6 மாதங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ரூ.6,000/- என இரண்டு முறை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், பெரியார் நகர், கச்சேரி தெருவை சேர்ந்த திரு.வீரன், வயது 59 அவர்கள் வர்ணம்பூசும் தொழில் மேற்கொண்டு வந்தார். தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளார். நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தெரிவித்தாவது, என் பெயர் வீரன். என் மனைவி பெயர் லட்சுமி பள்ளியில் பணி செய்து வருகிறார். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஒருவர் இன்ஜினியரிங் படிப்பு முடித்து விட்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்விற்கு பயின்று வருகிறார். மற்றொரு மகள் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் எனக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நுரையீரல் புற்றுநோய் கண்டறிப்பட்டது. நான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எனக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீவிர நோய் பாதிப்பு நலத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை ரூ.12,000/- பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இத்தொகை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்னை போன்ற கூலித்தொழிலாளிகளின் உடல்நலன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு நானும் எனது குடும்பத்தாரும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி சே.சுகந்தி, தொழிலாளர் உதவி ஆணையர் திருமதி கே.பி.இந்தியா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்